20 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த தலிபான் நிறுவனரின் கார்

Afghanistan Taliban War Taliban
By Irumporai Jul 08, 2022 09:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

  மறைந்த தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் காரை 20 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்கு அடியிலிருந்து தோண்டி எடுத்துள்ளனர்.

தலிபன் நிறுவனர்   

 ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா ஒமர், அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுவந்தார். 1996-ல் போரில் வெற்றிபெற்று ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.

அமெரிக்காவின் தலையீடு  

 அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் - குவைதா பயங்கரவாதிகள் தகர்த்த நிலையில், 2001-ல் ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அதில் தலிபான்களை வென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆட்சியில் அமர்த்தியது. 

காரில் தப்பிக்க முயற்சித்த ஒமர் 

 அந்த போரின் போது வெள்ளை நிற டொயோட்டா குவாலிஸ் காரில் பயணித்து தப்பிக்க முல்லா ஒமர் முயற்சித்தார். அமெரிக்கப் படையினர் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தியதால், அவர் காரில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

20 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த தலிபான் நிறுவனரின் கார் | Taliban Excavate Mullah Omars Car

அதனால் அவரது டொயோட்டா காரை தலிபான் படையைச் சேர்ந்த அப்துல் ஜபார் ஒமாரி என்பவர், ஸாபூல் மாகாணத்தில் உள்ள அவரது தோட்டத்தில், பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார். 

தோண்டியெடுக்கப்பட்ட கார் 

 கடந்த ஆண்டு ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்தச் நிகழ்வுகளுக்கிடையே தலிபான் நிறுவனரான முல்லா ஒமர், 2013-ம் ஆண்டு உயிரிழந்தார்.

20 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த தலிபான் நிறுவனரின் கார் | Taliban Excavate Mullah Omars Car

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு, தலிபான்கள் பூமிக்கு அடியில் இருந்த அந்த காரை தோண்டி எடுத்துள்ளார். அந்தக் கார் அதிக சேதமின்றி அப்படியே இருப்பதாகவும், அதை ஆப்கனின் தேசிய அருங்காட்சியகத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.  

இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்... தலிபான் போராளிகளுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி உத்தரவு