தாலிபான்கள் போராளிடா! தாலிபான்களை ஆதரித்த இயக்குனர் அமீர் - அதிர்ச்சி வீடியோ
தாலிபான்களை ஆதரித்து இயக்குனர் அமீர் பேசிய பழைய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை தாலிபான்கள் மெல்ல மெல்ல கைப்பற்றி வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு பயந்து அந்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா, இந்தியா என வெவ்வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடி ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
A few years back Director Ameer at a PFI meeting was supporting and glorifying the Talibans as freedom fighters and was also asking his fellow Muslim brothers to support and stand by them. pic.twitter.com/TyCRlpiPfH
— Vishwatma ?? (@HLKodo) August 15, 2021
தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உலகமே இருந்து வரும் சூழலில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஆதரவாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ஆப்கனில் உள்ள தாலிபன்கள் போராளிகள். கண்ணியமாக, காலரை உயர்த்தி சொல்லுங்கள்.. அவன் போராளிடா..அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், தங்களுடைய சொந்த கொள்கைக்காகவும், அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளி.
தாலிபன்கள் போராளிகள் என்று இஸ்லாமியர்கள் அனைவரும் தைரியமாக சொல்ல வேண்டும். உடனே புடுச்சி யாரும் உள்ளே போட்டுட மாட்டான். நீ சொல்லுற தீவிரவாதின்னு.
அப்படிப்பார்த்தா பகத்சிங், காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் கூட தீவிரவாதிதான். தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இறங்கும்போது தீவிரவாதிதான். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் போராளிகள் என்று வெட்கப்படாமல் சொல்லுங்கள்’’ என்று பேசியிருக்கிறார்.
உலக நாடுகள் தாலிபன்களுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் நிலையில், இவரது இந்த வீடியோ காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.