பொதுவெளியில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய கொடூரம்!

Afghanistan Crime
By Sumathi 1 வாரம் முன்

பொதுவெளியில் கசையால் அடித்து தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்செயல்

ஆப்கானிஸ்தான் லோகர் மாகாணத்தில் தாலிபான்கள் 14 பேரை பொதுவெளியில் வைத்து கசையால் அடித்து தண்டனை கொடுத்துள்ளனர். அதில் 14 பேரில் 11 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களை திருட்டு மற்றும் ஒழுக்கம் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டதாக தாலிபான் பிடித்து வைத்துள்ளனர்.

பொதுவெளியில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய கொடூரம்! | Taliban Crime Punishment To Woman Before The Crowd

இதற்காக நாள் குறித்து தண்டனை நிறைவேற்றும் நிகழ்வை காண வாருங்கள் என அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி பொதுவெளியில், பால் ஆலம் என்ற பகுதியில் உள்ள மைதானத்தில் 100க்கும் மேற்பட்டோர் முன் கசையடி தண்டனை வழங்கப்பட்டது.

கசை அடி

மேலும், அங்கு கூடிய பார்வையாளர்கள் இதனை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுவெளியில் பெண்களுக்கு கசை அடி வழங்கிய கொடூரம்! | Taliban Crime Punishment To Woman Before The Crowd

இந்நிலையில், இந்த மாதத்திற்குள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை முழுமையாக கறாராக அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சதா உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.