கல்லுாரியில் தோழியிடம் பேசிய முஸ்லிம் மாணவன் - அடித்து உதைத்த இந்து மாணவர்கள்
கர்நாடகாவில் உள்ள கல்லுாரியில் தனது இந்து தோழியுடன் பேசிக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவனை சக இந்து மாணவர்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தோழியிடம் பேசிய மாணவன்
கர்நாடகா மாநிலம் சுல்லியாவில் உள்ள ஜால்சூரில் வசிக்கும் லத்தீப்பின் மகன் முகமது சனீப் (19). இவர் சுல்லியா பகுதியில் உள்ள கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரது பெண் தோழியிடம் பேசி கொண்டிருந்துள்ளார். இதை அதே கல்லுாரியில் பயின்ற சில மாணவர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கல்லுாரி மைதானத்தில் தங்களைச் சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அடித்து உதைத்த மாணவர்கள்
இதையடுத்து முகமது சனீப் அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது கல்லுாரி தோழியுடன் பேசியதை கண்டித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Representative image. Credit: iStock Photo
மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் முகமது சனீப். இதையடுத்து மாணவனை கள்ளியாவில் உள்ள அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தீக்ஷித், தனுஷ், பிரஜ்வல், தனுஜ், அக்ஷய், மோக்ஷித், கவுதம் மற்றும் பலர் தன்னை கட்டையால் தாக்கியதாகவும், உயிருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.