பொதுவெளியில் தூக்கு: மீண்டும் பகீர் அளிக்கும் தாலிபான்!
கொலை செய்த ஒருவருக்கு பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீது தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்த வண்னம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக அடக்குமுறை சட்டங்களை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் கசையடி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது அந்நாட்டின் மேற்கு பாரா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு நபர் மற்றொரு நபரை தகராறு காரணமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கை அந்நாட்டு மத குருமார்கள் விசாரித்து பொதுவெளியில் மரண தண்டனை தர வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
மீண்டும் அராஜகம்
அதன் அடிப்படையில் அந்த நபருக்கு அந்நாட்டின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில், உள்துறை அமைச்சர் சிராஜுத்தின் ஹக்கானி, துணை பிரதமர் அப்துல் கானி பராதார் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
1990களில் கொடுமையான ஆட்சியளித்த தாலிபான்கள், மீண்டும் அதே காலகட்டத்தை பின்பற்ற வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த தூக்கு தண்டனை சம்பவம் ஒரு சாட்சி.