ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்ற 49 பேருக்கு மரண தண்டனை - அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம்

Death Algeria
By Thahir Nov 25, 2022 01:26 PM GMT
Report

ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்றதற்காக 49 பேருக்கு மரண தண்டனை அளித்து அல்ஜீரிய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பரவிய காட்டுத் தீ 

அல்ஜீரியாவில் கடந்த வருடம் ஆகஸ்டில் மூண்ட காட்டுத்தீயால் நாட்டுக்கே பெரும் அச்சுறுத்தல் எழுந்தது. இந்த தீயில் சிக்கி 2 நாட்களில் சுமார் 90 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீயை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக ஒரு வதந்தி பரவியது. அப்போது பென் இஸ்மாயில் என்ற நபர் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினருடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேவைப்பட்ட நேரத்தில் தனது வசிப்பிடத்திலிருந்து தொலைவிலுள்ள காட்டுப் பகுதிக்கு பென் இஸ்மாயில் பயணப்பட்டார்.

தன்னார்வலர் எரித்துக் கொலை 

அங்கே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட முயன்ற அவரை, காட்டுத்தீயை மூட்டிய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கும்பல் ஒன்று சந்தேகித்து பென் இஸ்மாயிலை கடுமையாக தாக்க தொடங்கியது.

ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்ற 49 பேருக்கு மரண தண்டனை - அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம் | Death Sentence For 49 People Court Action Verdict

அந்த பகுதியில் அந்நியரான பென் இஸ்மாயிலுக்கு பரிந்து பேச ஆளில்லை. அப்போது தீயணைப்புத்துறையினருக்கு உதவிக்காக வந்த போலீசார் பென் இஸ்மாயிலை மீட்டு தங்களது வாகனத்தில் அமர வைத்துள்ளனர்.

பென் இஸ்மாயிலை தாக்கிய சிறிய கும்பல் பின்னர் மீண்டும் பெரும் படையாக திரும்பி வந்து போலீஸ் வாகனத்தில் இருந்த பென் இஸ்மாயிலை கீழே இழுத்துப்போட்டு தாக்கியது.

இஸ்மாயிலின் வார்த்தைகளை பொருட்படுத்தாது அவரை துள்ளத்துடிக்க எரித்துக்கொன்றது அந்த ஈவு இறக்கமற்ற கும்பல்.

ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்ற 49 பேருக்கு மரண தண்டனை - அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம் | Death Sentence For 49 People Court Action Verdict

காட்டுத்தீயை அணைக்க தன்னார்வலராக அல்ஜீரியாவிற்கு செல்ல இருப்பது பற்றி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

49 பேருக்கு மரண தண்டனை 

இது வெளிச்சத்திற்கு வந்ததும் வெட்கி தலை குனிந்தது அல்ஜீரியா தேசம். இச்சம்பவத்தில் ஒரு கிராமமே கைது செய்யப்பட்டது.

இதில் தொடர்புடைய 49 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 28 நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டுக்கு பிறகு மரண தண்மனைகளை விதிக்காமல் இருந்த நாட்டில் தற்போது 49 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.