கருத்தடை மாத்திரைக்கு தடை - பெண்கள் மீது தொடரும் கொடுமைகள்!
கருத்தடை மாத்திரைக்கு தடை விதித்து தாலிபான் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்தடை மாத்திரை
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீது தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்த வண்னம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக அடக்குமுறை சட்டங்களை பின்பற்றி வருகிறது. பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து படிக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். மேலும், பூங்கா, ஜிம், கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்களுக்கு ஆண் மருத்துவர் மருத்துவம் போன்றவற்றிற்கும் அங்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில், இரண்டு நகரங்களில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
தடை
தாலிபான் போராளிகள் வீடு வீடாகச் சென்று பெண்களை அச்சுறுத்தி வருவதுடன், அனைத்து கருத்தடை மருந்துகள் மற்றும் சாதனங்களை அகற்றுமாறு மருந்தகங்களுக்கு உத்தரவிடுகின்றனர். கருத்தடை மாத்திரைகள் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகளின் சதி என்று தலிபான் போராளிகள் கூறுகின்றனர்.
இந்த உத்தரவுகள் உலகளாவிய அளவில் கடுமையாக எதிர்க்கப்பட்டது என்றாலும், அவர்களுக்கு உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை.