இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் - இந்தியாவுக்கு தலிபான் அறிவுரை

Twitter Afghanistan Taliban
By Nandhini Jun 08, 2022 05:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் என்று இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவுரை கூறியுள்ளது.

நூபுர் சர்மா

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் இறைதுாதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்தார். இது சர்வதேச அளவில் எதிர்ப்பை கிளப்பியது.

இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் - இந்தியாவுக்கு தலிபான் அறிவுரை | Taliban Afghanistan Twitter Msg

நூபுர் சர்மாவின் பேச்சுக்கு ஜிசிசி நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கத்தார், குவைத், ஓமன், சவுதி அரேபியா, யுஏஇ, ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மாலத்தீவுகள், ஜோர்டான், லிபியா என 15 நாடுகள் தங்களுடைய கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

சர்ச்சை கருத்தை தெரிவித்த நுபுர் சர்மா அக்கட்சியில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பைதோனி போலீஸ் நிலையத்தில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் - இந்தியாவுக்கு தலிபான் அறிவுரை | Taliban Afghanistan Twitter Msg

ஜபிபுல்லா முஜாகீத் டுவிட்

இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அந்த பதிவில், "முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.