10 வருட டேட்டிங்...43 வயது பேட்மிண்டன் வீரரை மணக்கும் நடிகை டாப்ஸி..!!
இந்திய திரையில் முக்கிய நாயகியாக வளம் வருபவர் நடிகை டாப்ஸி.
டாப்ஸி
தமிழில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான "ஆடுகளம்" படத்தின் மூலம் கவனம் பெற்றவர் டாப்ஸி. முதல் படமே வெற்றி படமாக அமைய அடுத்தடுத்த படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த நடித்தவர் ஹிந்தியில் கதையின் நாயகியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பில் வெளியான "பிங்க்", பட்லா, தப்பட்" போன்ற படங்களில் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.
10 வருட டேட்டிங்
தொடர்ந்து தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் பெரிதும் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி, விரைவில் திருமண உறவில் இணைய உள்ளார். கடந்த 10 வருடங்களாக அதாவது 2013-ஆம் ஆண்டு முதல் டாப்ஸி டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் ஃபோ என்பவரை டேட்டிங் செய்து வருகிறார்.
டென்மார்க்கில் பிறந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ, 43, 1998 இல் சர்வதேச தொடர்களில் அறிமுகமானார். அவர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக உயர்ந்துள்ளார். தற்போது இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
லண்டனில் 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் வெள்ளிப் பதக்கம், 2013 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி மற்றும் டேனிஷ் 2016 தாமஸ் கோப்பை வெற்றி ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் அடங்கும். இவர்களுக்கு விரைவில் உதய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது.