இனி ரோஹித் தான் நம்பர் 1 - அரை இறுதிக்குள் நுழைந்த இந்தியா

Rohit Sharma Indian Cricket Team Team India T20 World Cup 2024
By Karthikraja Jun 25, 2024 04:54 AM GMT
Report

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

ind vs aus

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி ரன் எதுவும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஓரளவுக்கு ரன் குவித்தனர். 

ஆனால் மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. 

ஓய்வு குறித்த சிந்தனை...சர்ச்சைக்கு மத்தியில் திடீரென ஷாக் கொடுத்த ரோகித்

ஓய்வு குறித்த சிந்தனை...சர்ச்சைக்கு மத்தியில் திடீரென ஷாக் கொடுத்த ரோகித்

ஆஸ்திரேலியா

206 என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய மிச்சேல் (30), மேக்ஸ்வெல் (20) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் இறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

india vs aus T20 2024

மொத்தத்தில் அஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது.

ரோஹித் சர்மா

மேலும், நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 2 சாதனைகளை செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் 8 சிக்சர்கள் அடித்த நிலையில் T20 போட்டியில் 200 சிக்ஸ் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 

rohit sharma record

மேலும், T20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வரிசையில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாமை (4140) பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா (4165) முதலிடத்திற்கு சென்றுள்ளார்.