T20 WC: மழையால் போட்டி பாதிக்கப்பட்டால்.. புதிய விதிமுறை அமல்!
டி20 உலகக் கோப்பை தொடரில் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு பின்னடையும் ஏற்பட்டது.
எந்த அணி அரையிறுதி செல்லும்?
இந்திய அணி 4 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றாலும், நாளை நடைக்கும் ஜிம்பாப்வே அணியுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையும் உள்ளது. ஏனென்றால், பாகிஸ்தான் அணி 4 போட்டியில் இரண்டு வெற்றியை பெற்றுள்ளது.
மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி செளத் ஆப்பிரிக்கா அணியும் ரன் அடிப்படையில் அதிகமாக உள்ளதால் அந்த அணிக்கும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது. மறு பிரிவில், நியூசிலாந்து அணி உள்ளே சென்றாலும், ஆஸ்திரேலியா அணியா அல்லது இங்கிலாந்து அணி உள்ளே செல்லுமா? என
அதற்கான போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கையுடன் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில், இலங்கை வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இல்லையெனில் இங்கிலாந்து அணி தகுதி பெறும்.
மழையால் பாதிப்பு?
இப்படி ஒரு சூழ்நிலையில், அடிக்கடி போட்டி மழையால் பாதிக்கப்படுவதால், இந்த தொடரின் அரையிறுதியின் போதும், இறுதிப்போட்டியின் போதும் மழை காரணமாக இதே போன்ற சூழல் ஏற்படக்கூடாது., என்பதற்காக இந்த உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக செமி பைனல் மற்றும் பைனல் போட்டிகளுக்கு முன்பாக விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறை
அதன்படி, அரையிறுதி போட்டி மற்றும் இறுதிப்போட்டி ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால், அடுத்த நாள் ரிசர்வ் டே போட்டி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தற்போது போட்டியின் முதல் பாதியோ அல்லது இரண்டாம் பாதியோ 10 ஓவர்கள் முழுவதுமாக முடிவடையாமல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தின் முடிவு அறிவிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு அணி முதலில் விளையாடி இருந்தாலும், இரண்டாவதாக விளையாடும் அணி குறைந்தது 10 ஓவர்களாவது விளையாடி இருக்க வேண்டும். அப்படி விளையாடி இருந்தால் தான் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்படும். இல்லையெனில் போட்டி வேறு ஒருநாள் நடத்தப்படும்.
எனவே, மழை காரணமாக எந்த ஒரு அணியும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இது போன்ற ரூல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.