டி20 உலகைக்கோப்பை; அந்த தமிழக வீரர் டீம்ல இருக்கவே கூடாது - இர்பான் பதான்!

Cricket Indian Cricket Team Dinesh Karthik IPL 2024 T20 World Cup 2024
By Jiyath Apr 17, 2024 08:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். 

டி20 உலகைக்கோப்பை

டி20 உலகைக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது.

டி20 உலகைக்கோப்பை; அந்த தமிழக வீரர் டீம்ல இருக்கவே கூடாது - இர்பான் பதான்! | T20 World Cup Irfan Pathan About Dinesh Karthik

இந்நிலையில் மீண்டும் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே தோனிக்கு நிகராக பினிஷிங் செய்யும் திறமையை கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு கடைசி முறையாக 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படக்கூடாது என ராயுடுவுக்கு முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "தினேஷ் கார்த்திக்கை நான் கண்டிப்பாக பாராட்டுவேன். அவர் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

தோனி குறித்த பேச்சு - எந்தவித ஆதரவுமின்றி தனியாக நிற்கும் பாண்ட்யா!

தோனி குறித்த பேச்சு - எந்தவித ஆதரவுமின்றி தனியாக நிற்கும் பாண்ட்யா!

டாடி ஆர்மி

ஆனால் இந்திய அணி மிகவும் வித்தியாசமானது. உலகக்கோப்பை வித்தியாசமான லெவலில் நடக்கும். அங்கே ஐ.பி.எல் போல உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் இருக்க மாட்டார்கள்.

டி20 உலகைக்கோப்பை; அந்த தமிழக வீரர் டீம்ல இருக்கவே கூடாது - இர்பான் பதான்! | T20 World Cup Irfan Pathan About Dinesh Karthik

உலகக் கோப்பையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் இருக்காது. 11 பேர் மட்டுமே விளையாடுவார்கள். எனவே அங்கே பேட்டிங் செய்வது வித்தியாசமான அழுத்தத்தை கொடுக்கும். பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதற்கும் மற்றவர்களை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. அறிமுக பவுலர்களுக்கும் அனுபவ பவுலர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. தோனியை போன்ற சாயல் அவரிடம் உள்ளதாக நீங்கள் சொன்னீர்கள்.

ஆனால் தோனி இல்லாத போது ரிஷப் பண்ட் பார்மில் இல்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்வேன். கார்த்திக்கிற்கு பதிலாக நான் சஞ்சு சாம்சனை கருத்தில் கொள்வேன். மற்றொரு வீரர் பார்மில் இருக்கிறார் என்பதற்காக தற்போதுள்ள வீரர்களை நாம் கழற்றி விட முடியாது. ராயுடு சிஎஸ்கே வீரர் என்பதால் மூத்த வீரரை சேர்த்து டாடி ஆர்மியை உருவாக்க நினைக்கலாம். ஆனால் இது இந்திய அணி" என்று தெரிவித்துள்ளார்.