T20 World Cup: மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு?

Indian Cricket Team South Africa National Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 29, 2024 12:30 PM GMT
Report

போட்டியின் போது வானத்தை மேகங்கள் மறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை 

டி20 உலகக் கோப்பை 2024 இன்று இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. முன்னதாக சில போட்டிகளில் மழை தலையிட்டு, முடிவுகளை மாற்றியமைத்தது.

ind vs sa

அரையிறுதிப் போட்டிகளிலும் மழையின் குறுக்கீடு இருந்தது. ஆனால், 2 அரையிறுதிப் போட்டிகளிலும் முடிவுகள் தெரிந்துவிட்டன. தற்போது, இறுதிப் போட்டியிலும் மழையின் குறுக்கீடு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பார்படாஸ் பிரிட்ஜ்டவுனிலுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகின்றன.

அதற்கெல்லாம் காரணமே கோலியின் ஈகோ தான்? வரலாற்றில் மோசமான சாதனை!

அதற்கெல்லாம் காரணமே கோலியின் ஈகோ தான்? வரலாற்றில் மோசமான சாதனை!

கோப்பை யாருக்கு

இதில், இன்று (ஜூன் 29, சனிக்கிழமை) மற்றும் நாளை ரிசர்வ் நாள் (ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களும் பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் மைதானத்தில் வீரர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

indian cricket team

99% வானத்தை மேகங்கள் மறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கையான வெளிச்சம் வெகுவாக குறைந்துவிடும். இன்று போட்டி நடக்கவில்லை என்றாலும்,

ரிசர்வ் நாளான நாளை போட்டி நடத்தப்படும். நாளையும் மழை குறுக்கிட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால், 2 அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.