இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. மத்த டீமுக்கு ஒன்னா? ஐசிசி அநியாயம் - வெடித்த சர்ச்சை!

Indian Cricket Team T20 World Cup 2024
By Sumathi Jun 27, 2024 09:30 AM GMT
Report

இந்தியாவுக்கு சாதகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடந்துக் கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஐசிசி பாரபட்சம்

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரை இறுதிப் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியாவுக்கு ஒரு நியாயம்.. மத்த டீமுக்கு ஒன்னா? ஐசிசி அநியாயம் - வெடித்த சர்ச்சை! | Icc Is Favorable To India T20 World Cup 2024

தென்னாப்பிரிக்கா எளிதாக 8.5 ஓவரில் சேஸிங் செய்து வென்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி கயானாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு மழை பெய்து வரும் நிலையில் போட்டி கைவிடப்படும் எனக் கூறப்படுகிறது.

அவருக்காகவே இந்தியா உலகக் கோப்பையை ஜெயிச்சே ஆகனும் - சேவாக்

அவருக்காகவே இந்தியா உலகக் கோப்பையை ஜெயிச்சே ஆகனும் - சேவாக்

மைக்கேல் வாகன் புகார்

அவ்வாறு நடந்தால் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இந்திய அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற்றி விடவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த அரையிறுதி போட்டி கண்டிப்பாக கயானாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த தொடருமே இந்தியாவை நோக்கி நடத்தப்படுவதால் அது மற்ற அணிகளுக்கு அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.