Reserve day கூட இல்லை...மழை குறுக்கிட்டால் எந்த அணி இறுதி போட்டிக்கு தேர்வாகும்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Indian Cricket Team England Cricket Team 2024 T20 World Cup Cricket Tournament
By Karthick Jun 27, 2024 06:56 AM GMT
Report

இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று இரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கனிஸ்தான் அணியை தும்சம் செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது தென்ன்னாப்ரிக்கா அணி. மறுபுறத்தில் இன்று இரவு இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன

Indian team world cup t20 2024

ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், சற்று ஏமாற்றும் வகையில் போட்டி நடைபெறும் இடமான கயானாவில் மழை அச்சுறுத்தல் நீடிக்கிறது.

தற்போதும் அங்கு பயங்கரமாக மழை பொழியும் நிலையில், மைதானத்தை முழுவதுமாக மூடி வைத்துள்ளார்கள். நேற்று பயிற்சி கூட மேற்கொள்ளமுடியாமல் இந்தியா அணி வீரர்கள் அறைக்கு திரும்பினார்கள்.

எந்த அணி 

இந்த சூழலில் தான், மழை பெய்து போட்டி ரத்தனால் இறுதி போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் அரையிறுதி போட்டிக்கு reserve day இருந்த நிலையில், இரண்டாவது போட்டி அதாவது இந்தியா - இங்கிலாந்து அணி போட்டுக்கு இது போன்ற reserve day இல்லை.

தலைமை பயிற்சியாளராகும் கம்பீர்...இத்தோட போதும் என விலகும் விவிஎஸ் லக்ஷ்மண்?

தலைமை பயிற்சியாளராகும் கம்பீர்...இத்தோட போதும் என விலகும் விவிஎஸ் லக்ஷ்மண்?

ஏனென்றால் வெறும் ஒரு நாள் இடைவேளையில் இறுதி போட்டி நடைபெறவிருப்பதால், இரண்டாவது போட்டிக்கு reserve day இல்லை. ஆனால், அதே நேரத்தில் அடுத்த 250 நிமிடங்கள் போட்டி முடிவடையும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

England team world cup t20 2024

அதுவும் நடைபெறவில்லை என்றால், எந்த அணி தகுதி பெறும் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது. குரூப் ஸ்டேஜ் முடிவுகளில் முன்னணி வகிக்கும் இந்தியா நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வாகிவிடும்.