இந்தியா 200 ரன் அடிச்சே ஆகனும்? இந்த 2 பேரை இறக்கினால் ஆப்கானிஸ்தான் காலி!
ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை தாண்டி இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.
IND vs AFG
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோத உள்ளது. இந்த போட்டி கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது இங்கு பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயமாக 200 ரன்கள் அடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் அணியின் பலமே சுழற் பந்துவீச்சாளர்கள் தான். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அவர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.
[HKJA3WV
பிட்ச் ரிப்போர்ட்
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், கரீம் ஜன்னத், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ஆகிய மூவரும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களிடம் இதுவரை 13 முறை ஆட்டம் இழந்துள்ளனர்.
எனவே, அவர்களை சமாளிக்க இடது கை ஆஃப் ஸ்பின்னர்களான ரவீந்தர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் நிச்சயம் அணியில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
மேலும், இடது கை லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் அணியில் இடம் பெறுவார் என்பதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுடைய பலவீனம் ஒன்றை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறி வைத்திருப்பதாக தெரிகிறது.