டி20 உலகக் கோப்பை; மொபைலில் இலவசமாக பார்க்கலாம் - அசத்தல் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை மொபைல் செயலி மூலம் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவின் தலைவர் சஜித் சிவானந்தன், "ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை- 2024 தொடரை மொபைலில் இலவசமாக வழங்குவதன் மூலம்,
ஹாட்ஸ்டார்
கிரிக்கெட் விளையாட்டை மேலும் அணுகக்கூடியதாகவும், நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களை சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளையும் மொபைலில் இலவசமாக வழங்கினோம். இது பார்வையாளர்களை கணிசமாக விரிவுபடுத்த எங்களுக்கு உதவுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil