டி20 உலகக் கோப்பை: எளிதில் வெல்லுமா இந்தியா? நெதர்லாந்து அணியுடன் இன்று மோதல்

T20 World Cup 2022
By Irumporai Oct 27, 2022 02:04 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பை போட்டி 

காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. 

டி20 உலகக் கோப்பை: எளிதில் வெல்லுமா இந்தியா? நெதர்லாந்து அணியுடன் இன்று மோதல் | T20 Wc Team India To Take On Netherlands

இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா நெதர்லாந்து

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.