12 வருடத்திற்கு பிறகு டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கிய இங்கிலாந்து!

Cricket England Cricket Team T20 World Cup 2022 Pakistan national cricket team
By Sumathi Nov 13, 2022 11:58 AM GMT
Report

பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

PAK vs ENG

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிஷ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறப்பாக விளையாடியபோது, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

12 வருடத்திற்கு பிறகு டி20 உலகக்கோப்பையை தட்டித் தூக்கிய இங்கிலாந்து! | T20 Wc 2022 England Won The Match

ரிஷ்வான் 15 ரன்களிலும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய ஷான் மசூத் தனது பங்கிற்கு 38 ரன்கள் அடித்த நிலையில் வெளியேறினார். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அபாரம்

இங்கிலாந்து அணியில், சாம் கரன் அபாரமாக பந்து வீச்சு 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அடில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி 26 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார். இதேபோல், ஹாரி புரூக் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி இணை அபாரமாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இங்கிலாந்து அசத்தல்

பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொயின் அலி 19 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138 ரன்களை எடுத்து வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.