கப்பு முக்கியம் பிகிலு : இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

England Cricket Team T20 World Cup 2022 Pakistan national cricket team
By Irumporai Nov 13, 2022 07:09 AM GMT
Report

8 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் இறுதி போட்டி இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் தகுதி பெற்றன.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து 

தற்போது இறுதி போட்டியானது இன்று நடக்கவுள்ளது.2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

கப்பு முக்கியம் பிகிலு : இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் | T20 World Cup Final Pm Congratulates England Team

இந்த நிலையில், டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இந்திய வம்சாவளி பிரதமரான ரிஷி சுனக் வாழ்த்து கூறியுள்ளார்.  

பிரதமர் வாழ்த்து

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அதிஷ்டம் உண்டாகட்டும்.

இங்கிலாந்து முழுவதும் உள்ள மற்ற ரசிகர்களுடன் சேர்ந்து நானும் உங்களை ஊக்கப்படுத்துகிறேன். நாங்கள் எல்லா வகையிலும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.