360 டிகிரியில் வெறியாட்டம் ஆடிய சூர்யகுமார் யாதவ் - கோலி, ரோகித் சாதனையை உடைத்து அபாரம்!
கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடியதை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ind-vs-wi
வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. 160 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி இந்த ஆட்டத்தில் முறியடிக்க வேண்டிய நிலை இருந்தது.
தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும் கில் 6 ரன்களில் ஆட்டம் இழக்க களத்திற்கு வந்த சூரிய குமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டார். 23 பந்துகளில் எல்லாம் சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து அலறவிட்டார்.
சூர்யகுமார் யாதவ்
இதில் ஏழு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மொத்தமாக 10 பவுண்டரிகள் நான்கு இமாலய சிக்சர்கள் அடிக்க 44 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சூரிய குமார் யாதவ் படைத்தார்.
முன்னதாக இந்த சாதனையில் கோலியும், ரோகித் சர்மாவும் இடம்பெற்றிருந்தனர்.
அதிக ரன்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி சூரியகுமார் யாதவ் நான்காம் இடத்தை பிடித்தார். 2 ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.