இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை!

Cricket Indian Cricket Team T20 World Cup 2022 Suryakumar Yadav
By Sumathi Nov 06, 2022 11:00 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பயங்கர ஃபார்மில் கலக்கி கொண்டு இருக்கும் வீரர் என்றால் அது சூர்ய குமார் யாதவ் தான். இவரின் தனித்திறமையே மைதனாத்தில் அனைத்து விதமான இடங்களிலும் ரன்களை குவிக்கும் திறமையுடைவர்.

டி20 போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் இவர் யார் என இந்திய அணியே திரும்பி பார்க்கிறது.

யார் இவர்?

மும்பையை சேர்ந்த சூர்யகுமார் யாதவின் முழு பெயர் சூர்யகுமார் அசோக் யாதவ். செப்டம்பர் 14 ஆம் தேதி 1990-ல் பிறந்தவர். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், மகாராஷ்டிராவின் தெருக்களில் விளையாடி தான் தன் திறமையை வளர்த்துகொண்டார்.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் இரண்டிலும் விளையாட்டு மீது ஆர்வம் கொண்டவர். இவரின் ஆட்டத்தையும், ஆர்வத்தையும் கண்டு, இவரின் தந்தை அசோக் குமார் 12 வயதில், செம்பூரில் உள்ள பார்க் காலனி முகாமில் சேர்த்தார். இவரை ஊக்கப்படுத்தி, இவரது பயிற்சியாளர் எச்.எஸ். காமத் யாதவ் எல்ஃப் வெங்சர்கர் பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தார்.

அங்கு இவருக்கு திலீப் வெங்சர்கர் வழிகாட்டி மும்பை அணியில் இடம் பெற செய்தார்.

 ரஞ்சி போட்டியில் இடம்

32 வயதாகும் சூர்யகுமார் யாதவ் கடந்த 2010-ல் ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். அப்போது டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 73 ரன்களை எடுத்தார். அடுத்த வருடத்திலேயே ரஞ்சியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 4ஆம் இடத்தை பிடித்தார்.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

மும்பை அணிக்கு தேர்வு

 அதன் பின், 2011 ஆம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வாகினார். ரஞ்சிப் போட்டியிலேயே 80 ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பதால் டி20-க்கு இவருடைய ஆட்டம் பொருத்தமாக இருக்கும் என்று மும்பை நிர்வாகம் எண்ணி, ஒரு மேட்சுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்தது.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

கொல்கத்தா அணி ஏலம்

 2014-ம் வருடம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சூர்யகுமாரை போட்டி போட்டு ரூ. 70 லட்சத்துக்கு இவரை விலைக்கு வாங்கியது, கொல்கத்தா அணி. அந்த வருடத்திலேயே ரஞ்சி போட்டிக்கு மும்பை அணியின் கேப்டனாகத் தேர்வானார் சூர்யகுமார். இளம் வயதிலேயே கேப்டனாக தேர்வான அவரை தமிழ் நாடு அணியிடம் தோல்வி கண்டது.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

இதனால் சூர்யகுமாரின் கேப்டன்ஷி பற்றி மும்பை அணியிடன் புகாரும் எழுந்தது. அதன் பின்னர் பல விமர்சனங்களால் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனாலும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் அணிக்குப் பெரிய பலமாக இருந்தார்.

தொடர்ந்து விளையாடி சூர்யகுமார் யாதவ் ஒரிசாவிற்கு எதிராக அடித்த இரட்டை சதம் இவரை அற்புதமான வீரராக முன் நிறுத்தியது. 2015- ஆம் ஆண்டு கொல்கத்தா ஐபிஎல் அணியில் விளையாடிய இவர் மும்பை அணிக்கு எதிராக 20 பந்துகளில் 46 ரன்களை குவித்து, அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

ரன்கள் குவிப்பு

 பின் 2018-ம் ஆண்டு, மும்பை அணி மீண்டு 3.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. தொடக்க ஆட்டக்காரான வாய்ப்பையும் மும்பை அணி வழங்கியது. அந்த வருடத்தில், 14 போட்டிகளில், 4 அரை சதத்துடன் 512 ரன்களை குவித்தார்.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

2019-ம் ஆண்டில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்து சூர்யா 16 போட்டியில்,424 ரன்களை குவித்தார்.

காதல் திருமணம்

 அதிக கோபம் கொண்ட சூர்யகுமார் யாதவ் 2016ம் ஆண்டின் போது, தேவிஷா ஷெட்டி என்ற டான்ஸர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவரின் மனைவி, தேவிஷாவை சூர்யகுமார் யாதவ் முதன் முதலில் சந்தித்தது 2012 ஆம் ஆண்டு தங்களுடைய கல்லூரியில் தான். நல்ல நண்பர்களாக இருந்த, இருவர்கள், தேவிஷாவின் நடனத்துக்கான சூர்யகுமாருக்கு தேவிஷாவை மிகவும் பிடிக்கும்.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

அதேபோல் கல்லூரி காலத்திலேயே சூர்யகுமாரின் சிக்ஸருக்கு மயங்கிப் போயிருந்தார். காலேஜின் சூப்பர் ஜோடிகளில் இவர்களும் அடங்குவர். 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் லவ் டேட்டிங் என்று சுற்றிக் கொண்டிருந்த இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பெற்றோர்களின் சம்மத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். 

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

இந்திய அணிக்கு தேர்வு

 அதே ஆண்டில் ஜூலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் இடம் கிடைத்தது. அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். 

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

அடுத்ததாக அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் இடம்பெற்றார்.இலங்கைக்கு எதிராக தனது முதல் ஒருநாள் அரைசதம் அடித்தார்.

இந்திய அணியின் 360 நாயகன்

 இத்தொடரில், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். தற்போது இந்திய அணியில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இவர், இந்திய அணியின் 360 டிகிரி என அன்போடு அழைக்கிறார்கள். இந்திய அணியில், மூன்றாவது வீரராக களமிறங்கும் இவரின் ஆட்டம் அனல் பறக்கிறது.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

டி20 போட்டியில் அதிகபட்ட்சமாக 117 ரன்களை அடித்த இவர், 1200 ரன்களுக்கு மேல் அடித்து, டி20 போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக முதல் இடத்தில் உள்ளார். மேலும், இதுவரை 13 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 1 சதமும் 11 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

அதிலும் இந்த வருடம் சூர்யகுமாரின் வேகத்துக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. தற்போது டி20 உலககோப்பை கலக்கி கொண்டிருக்கும் இவர் இந்திய் அணிக்காக இவர் பல வெற்றிகளை தேடித்தருவார் என்பதே ரசிகர்களின் கருத்தும், முன்னாள் வீரர்களின் கருத்தாகவுமே உள்ளது.

டி20 போட்டியில் முதலிடம்

சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டில் 935 ரன்கள் குவித்ததன் மூலம் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியின் சிம்ம சொப்பனமாக சூர்யாகுமார் யாதவ் - கடந்து வந்த பாதை! | About Suryakumar Yadhav In Cricket

இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான பின்னுக்கு தள்ளியுள்ளார். இவர், 863 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரிஸ்வான் 843 புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும், கான்வே 792 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.