சிம்புக்கு விரைவில் கால்கட்டு.. பொண்ணு சொந்த ஊராம்..தீயாய் பரவும் தகவல்!

Silambarasan Only Kollywood Gossip Today Marriage
By Sumathi Aug 28, 2022 05:30 PM GMT
Report

சிம்புவுக்கு விரைவில் திருமணம் முடிக்க, பெண் தீவிரமாக பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு 

நடிகர் சிம்பு தற்போது வந்து தனது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

சிம்புக்கு விரைவில் கால்கட்டு.. பொண்ணு சொந்த ஊராம்..தீயாய் பரவும் தகவல்! | T Rajendar Family Searching For Bride For Simbu

இந்தநிலையில் 39 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார் என அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணமாவே உள்ளனர்.

 விரைவில் திருமணம்

இதனிடையே, சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட டி.ராஜேந்தர், அமெரிக்காவில் சிகிச்சைப் பெRறு பின் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த சூழலில், நடிகர் சிம்புவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் தீவிர ஈடுபாடுடன் இறங்கியுள்ளனர்.

சிம்புக்கு விரைவில் கால்கட்டு.. பொண்ணு சொந்த ஊராம்..தீயாய் பரவும் தகவல்! | T Rajendar Family Searching For Bride For Simbu

மேலும், டி.ராஜேந்தரின் சொந்த பூமியான மயிலாடுதுறை பகுதியில் சிம்புவுக்குப் பெண் தேடும் படலம் நடந்துவருகிறதாம். டி.ராஜேந்தர் ஓய்வில் இருப்பதால் அவரது மனைவி உஷாதான் பெண் பார்க்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இதற்காக மயிலாடுதுறை செல்கிறாராம். கூடவே சிம்புவின் தங்கை இலக்கியாவும் சென்று அண்ணனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுவதாகச் சொல்கிறார்கள். இதனைக் கவனித்த கோலிவுட் வட்டாரம் விரைவில் சிம்புவின் திருமணத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.