பேரன் பேத்திகளே இல்லாத நகரம்; உலகிலேயே இதுதான் முதல்.. ஏன் தெரியுமா?
சிட்னி நகரம் விரைவில் வாரிசு இல்லா நகரமாக அறியப்படும் எனக் கூறப்படுகிறது.
சிட்னி நகரம்
உலக நாடுகளில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று சிட்னி. அங்கு 2016-2021 க்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை இருமடங்கு குறைந்துள்ளது.
அந்த நகரத்தில் வீட்டு வாடகை மற்றும் வீட்டின் விலை உயர்வு, தினசரி வேலைக்காக நீண்ட தூரம் பயனம் போன்ற மோசமான சூழ்நிலை இங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால், பெரும்பாலான இளைஞர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியேறுவதாக கமிஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் அதிர்ச்சி
தொடர்ந்து, வீட்டு செலவுகள் கட்டுப்படுத்த முடியாமலும், அதிக வாடகை கொடுக்க முடியாமல் மக்கள் திணருவதால் பல இளம் குடும்பங்கள் சிட்னியை விட்டு வெளியேறுகின்றன. இங்குள்ள உள்ள உயர் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு இருப்பதால், பிரச்சனை தீவிரமடைந்துள்ளதாக தெரிகிறது.
தனி வீடுகளை விட, அபார்ட்மெண்ட் தான் நல்லது என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது அந்த மக்களின் நிலையை பூர்த்தி செய்ய நியூ சவுத் வேல்ஸில் 2041 ஆம் ஆண்டளவில் 900,000 வீடுகள் கட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சிட்னியில் இதே மாதிரியான சூழ் நிலை தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருந்தால் விரைவில் வாரிசு இல்லாத நகரமாக மாறும் என உற்பத்தித் திறன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.