இனி குழந்தைகள் செல்போன், டி.வி பார்க்க தடை - அரசின் அதிரடி உத்தரவு!
குழந்தைகளை செல்போன், டிவி பார்க்க அனுமதிக்கக் கூடாது என்று பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
குழந்தைகள்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது அதிக அளவு குறைந்துவிட்டது எனலாம். அதற்கு முக்கிய காரணமாக செல்போன் மற்றும் தொலைக்காட்சி ஒரு தடையாக இருப்பதுதான்.
இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும்.
அரசு உத்தரவு
என்றும் குழந்தைகளை செல்போனை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோரை அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. மேலும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1 மணி நேரம்
மட்டுமே செல்போன் மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம். 6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பார்க்கலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே செல்போன்
மற்றும் தொலைக் காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் உறங்குவதற்கு முன்பு செல்போன் பார்க்க கூடாது. இரவில் படுக்கையறைக்கு வெளியே செல்போன் மற்றும் டேப்லெட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.