உடலுறவை விளையாட்டு போட்டியாக நடத்த இருக்கும் நாடு - எங்கு தெரியுமா?
ஸ்வீடன் உடலுறவை ஒரு போட்டியாக நடத்தவுள்ளது.
ஸ்வீடன்
ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு, ஐரோப்பிய செக்ஸ் சாப்பியன்ஷிப் என்ற போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி வரும் ஜூன் 8ஆம் தேதி தொடங்குகிறது.
அதில், பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் இருப்பார்கள் என போட்டியை நடத்தும் பெடரேஷன் தெரிவித்துள்ளது. போட்டியில் 70 சதவீத வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், 30 சதவீத வாக்குகளை நடுவர்கள் அளிப்பார்கள் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அங்கீகாரம்
இந்த போட்டி பல வாரங்களாக, பங்கேற்கும் நபர்களுக்கு துணையை கவர்தல், உடல் மசாஜ், ஓரல் செக்ஸ், உடலுறவு, சகிப்புத்தன்மை உள்ளிட்ட 16 பிரிவுகளில் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தினமும் சுமார் 6 மணிநேரம் வரை போட்டியில் கலந்து கொள்ள தேவைப்படலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க 20 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் தான் இந்த விவகாரங்களை இயல்பான ஒன்றாக பேசி விவாதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.