குழந்தைகள் மொபைல், டிவி பார்க்க தடை.. அரசின் அதிரடி உத்தரவு - எங்க தெரியுமா?
ஸ்வீடனில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் டிவி, மொபைல் உபயோகிக்கக் கூடாது என அந்நாட்டுத் தடை விதித்துள்ளனர்.
ஸ்வீடன்
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டு வந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது பெரும்பாலான சிறுவர்கள், குழந்தைகள் தீவிரமாக மொபைல், டிவி மற்றும் இணையத்தளம் போன்ற விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் ஒரு பக்கம் நன்மைகள் என்றாலும், மறுபுறம் தீமைகளும் அடங்கியுள்ளது. அதிக நேரம் மொபைல் மற்றும் டிவி பார்ப்பதால் சிறுவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஸ்வீடனில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் டிவி, மொபைல் உபயோகிக்கக் கூடாது என அந்நாட்டுத் தடை விதித்து சில விதிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் பார்க்க அனுமதிக்கக் கூடாது.
உபயோகிக்கக் கூடாது
மேலும், 2-5 வயதுள்ள குழந்தைகளை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே செல்போன் மற்றும் டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் . மேலும் , 6-12 வயதுக் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை டிவி, மொபைல் பார்க்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து 13- 18 வயது உடையவர்கள் ஒரு நாளைக்கு 2மணி முதல் 3 மணி நேரம் மட்டுமே செல்போன், டிவியை பார்க்கப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.