2 குழந்தைகள்; 15 வயது இளையவருடன் திருமணம் - காரணம் சொல்லும் பிரபல நடிகை!
காதல் வதந்திகளுக்கு சுஷ்மிதா சென் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சுஷ்மிதா சென்
நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக 'ரட்சகன்' என்னும் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுஷ்மிதா சென்(46). பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
இதுவரை அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு 'Taali' படத்தில் நடித்திருந்தார். இது கடந்த 2023-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, சுமார் 5 ஆண்டுகள் ரோஹ்மன் என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து, பிறகு கடந்த 2021ம் ஆண்டு இவருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர்.
ரிலேஷன்ஷிப்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் 56 வயதான தொழிலதிபர் மற்றும் ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இருவரும் காதல் செய்துவருவதாகவும், லிவ்-இன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சுஷ்மிதா, "எனது ஐந்து ஆண்டுகாள காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இருவரும் பரஸ்பர அன்புடன் பிரிந்துவிட்டோம்.
அந்த ஐந்து ஆண்டுகால காதல் வாழ்வை எனக்கு நீண்ட காலம்தான். இப்போது நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. நிம்மதியாக சிங்கிளாக நான் என் வாழ்வை வாழ்கிறேன். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நான் தனிமையாக உணர்ந்தால் நண்பர்களுடன் பழகுகிறேன்.
அவர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்கிறேன். இதுபோது எனக்கு வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் சிங்கிளாகவே என் வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.