‘அவங்க மேல எனக்கு ஒரு கிரஷ் இருக்கு...’ - முதன்முறையாக மனம் திறந்த நாகசைதன்யா

Samantha Naga Chaitanya
By Nandhini Aug 18, 2022 12:51 PM GMT
Report

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.

கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பின்பு, இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

naga-chaitanya-samantha

அடுத்தடுத்து ஹிட்டடித்த படங்கள்

சில மாதங்களுக்கு முன்பு ‘புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதனையடுத்து, சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

பாலிவுட்டில் நடித்த நாகசைதன்யா

முதன்முறையாக பாலிவுட்டில் நாகசைதன்யா, நடிகர் அமீர்கானுடன் இணைந்து ‘லால் சிங் சத்தா’ படம் நடித்துள்ளார். இப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. இப்படம் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள அமீர்கானின் நண்பராக நாகசைதன்யா நடித்திருக்கிறார்.இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Naga Chaitanya

நாகசைதன்யாவின் கிரஷ்

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாகசைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தன்னுடைய செலிபிரிட்டி கிரஷ் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனக்கு பாலிவுட்டில் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். ப்ரியங்கா சோப்ரா, கரீனா கபூர், ஆலியா பட் இவர்களின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருக்கும். இவர்களின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதில் கத்ரீனா கைஃப் ரொம்ப அழகு நிறைந்தவர். என்னுடைய முதல் செலிபிரிட்டி கிரஷ் யார்ன்னு தெரியுமா? நடிகை சுஷ்மிதா சென். இதை ஒருமுறை நான் அவரை நேரில் சந்திக்கும்போது அவரிடமே கூறியுள்ளேன் என்றார்.