சுஷாந்த் சிங் மரணம் ஒரு கொலை - பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பகீர் தகவல்

Bollywood Crime Death Sushant Singh Rajput
By Sumathi Dec 26, 2022 11:26 AM GMT
Report

நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சுஷாந்த் சிங்

தன்னுடைய உழைப்பால் தனி ஆளாக, பல கஷ்டங்களை தாண்டி பாலிவுட் முன்னணி நடிகரில் ஒருவரானார் நடிகர் சுஷாந்த். இவருக்கென்று ரசிகர் பட்டாளம் அதிகம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார்.

சுஷாந்த் சிங் மரணம் ஒரு கொலை - பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் பகீர் தகவல் | Sushant Singh Rajput Was Murdered

இதுவரையில் அவருடைய மரணத்திற்கான சரியான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் அதற்கான மர்மம் நீடித்துக் கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், உடற்கூராய்வு செய்த மருத்துவர், "சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, ​​கூப்பர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஐந்து சடலங்களைப் பெற்றோம்.

கொலை 

அந்த ஐந்து உடல்களில் ஒன்று வி.ஐ.பி. உடல். நாங்கள் பிரேத பரிசோதனை செய்யச் சென்றபோது, ​​அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல காயங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்கள் இருப்பதை பார்த்தோம்.போஸ்ட்மார்ட்டத்தை பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், சில புகைப்படங்களை மட்டுமே எடுக்குமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். எனவே, அவர்களின் உத்தரவுப்படி நாங்கள் செய்தோம். சுஷாந்தின் உடலை முதன்முறையாகப் பார்த்தபோது, ​​அது தற்கொலையல்ல, கொலை என உணர்கிறேன் என்று சீனியர்களிடம் உடனடியாக தெரிவித்தேன்.

நாங்கள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். இருந்தாலும், சீக்கிரம் படங்களை க்ளிக் செய்து, உடலை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே, இரவில்தான் பிரேதப் பரிசோதனை செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.