மறுதீர்ப்பு வரும்வரை ‘சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிடக்கூடாது’ : நீதிபதிகள் உத்தரவு

cinema
By Nandhini Jun 03, 2021 07:33 AM GMT
Report

மறைந்த நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் விவகாரத்தில் தீர்ப்பு வரும்வரை பயோபிக் படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தன்னுடைய உழைப்பால் தனி ஆளாக, பல கஷ்டங்களை தாண்டி பாலிவுட் முன்னணி நடிகரில் ஒருவரானார் நடிகர் சுஷாந்த். இவருக்கென்று ரசிகர் பட்டாளம் அதிகம். ஹிந்தி திரையுலகத்தில் மட்டும் கிடையாது.

அனைத்து மொழி திரையுலகத்திலும் நடிகர் சுஷாந்த்திற்கு ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய இயல்பான, துறுதுறு நடிப்பால் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் இழுத்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். இதுவரையில் அவருடைய மரணத்திற்கான சரியான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் அதற்கான மர்மம் நீடித்துக் கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் எடுக்க சில இயக்குநர்கள் ஆர்வம் காட்டி எடுத்தும் வருகின்றனர். அதில், ஒன்றுதான் ‘நய்யே: தி ஜஸ்டிஸ்” திரைப்படம். சுஷாந்த் சிங் ராஜ்புத்தாக ஜுபர் கானும், ரியா சக்ரவர்த்தியாக ஷ்ரேயா சுக்லாவும் நடித்திருக்கிறார்கள். திலீப் குலாட்டி இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் 11ம் தேதி வெளியாக உள்ளது.

மறுதீர்ப்பு வரும்வரை ‘சுஷாந்த் சிங் ராஜ்புத் பயோபிக் படத்தை வெளியிடக்கூடாது’ : நீதிபதிகள் உத்தரவு | Cinema

இதனையடுத்து, தன்னுடைய மகன் குறித்த எந்த பயோபிக் படத்தையும் வெளியிடக்கூடாது என்று சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுஷாந்த் சிங் குறித்து படத்தில் எதுவுமே கிடையாது. அவரது பெயர் எதையும் பயன்படுத்தவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், மறு தீர்ப்பு வரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.