சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு காரணம் அவரது காதலிதான்.. போலீஸார் குற்றச்சாட்டு!
‘காய் போ சே’ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சுஷாந்த் சிங் அப்படத்தை தொடர்ந்து ஆமிர் கான் ஹீரோவாக நடித்த படமான பிகேவிலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கின்றார்.
சுஷாந்த் சிங்
இவ்வாறாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சுஷாந்த் சிங் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்கை வரலாற்று படமான ‘தோனி தி அண்டோல்டு ஸ்டோரி’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பிரபலம் ஆனார்.
இவ்வாறாக தனது திரையுலக வாழ்க்கையின் வெற்றிக் கனியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நடிகர் சுஷாந்த் சிங் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் திகதி மும்பையில் உள்ள
தற்கொலை
அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸாரால் பிணமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்துள்ளார்களா என்பதற்கான விடை தற்போது வரை கிடைக்கவில்லை.
எனினும் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. சுஷாந்த் சிங் மரணத்தில் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால்
போதைப் பொருள்
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் இதுவரை 35 பேரை குற்றவாளிகள் பட்டியலில் இணைத்துள்ளனர்.
அதில் சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி என்பவரின் பெயரும் இடம்பெற்றிருக்கின்றது. இவர் மீது இதுவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரியா சக்ரபோர்த்தி
இவ்வாறாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் படி நடிகை ரியா தனது சகோதரர் மூலம் அடிக்கடி போதைப் பொருட்களை வாங்கி அவரது காதலன் சுஷாந்துக்கு கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு ரியா தான் உடந்தையாக இருந்திருக்கின்றார் எனவும் அக்குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கல்யாணம் சின்ன சாப்டர்..அதவிட நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு... காணாமல் சென்ற நடிகை தகவல்!