சுஷாந்த் சிங் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் பலி - ரசிகர்கள் அதிர்ச்சி
பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இந்தி சினிமாவில் வளரும் நடிகராக இருந்தார். அவரின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்த நிலையில், கடந்தாண்டு ஜுன் 14 ஆம் தேதி தனது மும்பை பாந்த்ரா வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இந்தியாவையே உலுக்கிய சுஷாந்த் மரணம் தொடர்பாக இன்னும் விராசணை போய்க்கொண்டிருக்கிறது.இதனிடையே மூத்த ஹரியானா காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா தேவி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவிலிருந்து பீகாருக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஓ.பி.சிங்கின் மைத்துனர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆவார். இவர்களது வாகனம் க்கிசராய் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது லாரி ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் பலியாகினர். காயமடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக லக்கிசராய் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் லால்ஜித் சிங் (ஓ.பி. சிங்கின் மைத்துனர்), அவரது இரண்டு மகன்கள் அமித் சேகர் என்ற நெமனி சிங் மற்றும் ராம் சந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேபி தேவி, அனிதா தேவி மற்றும் டிரைவர் பிரீதம் குமார் என அடையாளம் காணப்பட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நேரடி குடும்பத்தினர் இல்லை என்றபோதிலும், உயிரிழந்தவர்கள், அவரது உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.