உலகக்கோப்பை டென்ஷன் - வாரிசு படம் பார்த்து VIBE'பான இந்திய அணி !! VIRAL VIDEO
டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணி தற்போது அமெரிக்காவில் உள்ளது.
டி20 உலகக்கோப்பை
பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள உலகக்கோப்பை தொடருமா வரும் ஜூன் 1-ஆம் துவங்கி நடைபெறவிருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஐபிஎல் தொடரில் இருந்து விடை பெற்ற இந்திய அணி வீரர்கள், 2 தினங்களுக்கு முன்பு அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். இந்திய அணி இடம் பெற்றுள்ள டேபிளில் பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து மற்றும் யூ.எஸ்.ஏ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது.
Vibe
இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்ற போது, நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், விமானத்தில் பயணித்த போது, விஜய் நடித்த வாரிசு படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக அமர்ந்தபடியே ஆட்டம்போட்டுள்ளார்.
?❤️ pic.twitter.com/kuh5fee4Qe
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) May 26, 2024
இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. வாரிசு திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கும் காட்சியை பார்த்துவிட்டுதான் குஷியில் இப்படி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.