விவாகரத்து பிரச்சனை - இந்திய அணியுடன் செல்லாத ஹர்திக்? உலகக்கோப்பையில் இருந்து விலகலா?
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.
டி20 உலகக்கோப்பை
பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள உலகக்கோப்பை தொடருமா வரும் ஜூன் 1-ஆம் துவங்கி நடைபெறவிருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஐபிஎல் தொடரில் இருந்து விடை பெற்ற இந்திய அணி வீரர்கள், 2 தினங்களுக்கு முன்பு அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். இதில் முக்கியமாக அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை.
ஏற்கனவே அவர் தனது மனைவியை பிரியவுள்ளார் என தகவல்கள் வைரலான நிலையில், அது குறித்து அதிகாரப்பூரவ எந்த அறிவிப்பும் இல்லை. அதனை தொடர்ந்து, அவர் இந்திய அணியுடன் பயணம் செல்லாததால், அவர் தொடரில் இருந்து விலகுகிறாரா? என்ற கருத்துக்களெல்லாம் அதிகரித்தன.
விலகலா?
மும்பை அணி வெளியேறிய பிறகு, தனியாக வெளிநாடு ஒன்றில் சுற்றுலா சென்ற ஹர்திக் நேற்று மதியம் இந்திய அணியுடன் நியூ யார்க் நகரில் இணைந்தார் என கூறப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முக்கிய ஆல் ரௌண்டராக இடம்பெற்றுள்ளார் ஹர்திக் பாண்டியா. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை என்றாலும், அணியில் ஹர்திக் போன்ற வீரர் ஒருவர் இடம்பெறுவது முக்கியமானதாகும்.