திஷா பதானி காதலருடன் ஊர் சுற்றும் மனைவி - சிலேண்ட்டான ஹர்திக்!!
கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா விரைவில் விவாகரத்து பெறவுள்ளார் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த 2020-ஆம் ஆண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ள மாடல் நடிகையான செர்பியாவை சேர்ந்த நடாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவிற்கு பெரும் பின்னடைவான ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது சில தினங்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா பிரியவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதிலும் குறிப்பாக ஜீவனாம்சமாக ஹர்திக் பாண்டியா மனைவிக்கு 70%சொத்துக்களை தர போகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில், அண்மையில் நடாஷா வேறொரு ஆண் நண்பருடன் வெளியே சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
அவர் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானியின் காதலர் எனப்படும் அலெக்சாண்டர் அலெக்ஸ்லிக் (Aleksander Alexllic).
இருவரும் காதலிக்கிறார்களா என புரளி கிளம்பிய நிலையில், அலெக்சாண்டர் அலெக்ஸ்லிக்கும் செர்பியா நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவருக்கும் நடாஷாவிற்கும் நட்பு ரீதியிலான பழக்கம் மட்டுமே தான் என தெரிவிக்கப்படுகிறது.