70% ஜீவனாம்சம் கொடுக்கும் ஹர்திக்? பின்னால் இப்படி ஒரு சமாச்சாரமா? கசிந்த தகவல் !!
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து 70% ஜீவனாம்சம் மனைவி நடாஷா பெறவுள்ளதாக செய்திகள் வளம் வருகிறது.
ஹர்திக் பாண்டியா
கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா கடந்த 2020-ஆம் ஆண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ள மாடல் நடிகையான செர்பியாவை சேர்ந்த நடாஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஆண்டு ஹர்திக் பாண்டியாவிற்கு பெரும் பின்னடைவான ஒன்றாக அமைந்துள்ளது.
2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணியின் கேப்டனாக ஒரு கோப்பை, ஒரு முறை இறுதி போட்டி என முன்னேறிய ஹர்திக், மும்பை அணி கேப்டனாக பெரும் விமர்சனத்தை பெற்றார்.
70%
அணியின் பெரிய தோல்வியை சந்தித்து, தொடரில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது உலகக்கோப்பைக்காக தயாராகி வரும் ஹர்திக்கிற்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது விவகாரத்து செய்தி.
நடாஷாவும் அவரும் பிரியவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவை யாவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் தான் ஜீவனாம்சமாக ஹர்திக் பாண்டியா நடாஷாவிற்கு 70% கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் உள்ளது. அதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது.
செர்பியா நாட்டை சேர்ந்தவரான நடாஷா உண்மையிலேயே ஹர்திக் பாண்டியாவை பிரிந்தால், அந்நாட்டின் சட்டத்தின் படி அவர் சொத்தில் 70% ஜீவனாம்சம் அளிக்க வரும் என சுட்டிக்காட்டப்படுகிறது.