கோலியின் கெரியர் ரெக்கார்டை காலி செய்த சூர்யகுமார் - பிரம்மாண்ட சாதனை!
விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.
விராட் கோலி சாதனை
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் தனது சர்வதேச டி20 வாழ்வில் 20 ஆவது அரை சதத்தை கடந்தார்.
இந்திய அணி 213 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார்.
முறியடித்த சூர்யகுமார்
இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி உடன் பகிர்ந்து கொண்டார்.
விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். தற்போது சூர்யகுமார் யாதவ் வெறும் 69 போட்டிகளில் மட்டும் விளையாடி 16 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.