அயோத்தி ராமருக்கு சூரிய திலகம்..என்ன அது சூரிய திலகம் - அப்படி என்ன விஷேசம்?
ஸ்ரீ ராம நவமியின் போது ஸ்ரீ ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளியை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த சூர்ய திலகம்.
அயோத்தி ராமர்
கோவில் கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவிலை கும்பாபிஷேகம் நடத்தி திறந்து வைத்தார். நாட்டில் பெரும் கவனத்தை பெற்ற இக்கோவிலுக்கு தற்போது தினம்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் சென்று தரிசித்து வருகிறார்கள்.
இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி கோவில் கோலாகலம் பூண்டுள்ளது. ராமபிரானுக்கு சிறப்பான வழிபாடுகளும் பூஜைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றில் சூரிய திலகம் என்ற ஒரு விஷயம் மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சூரிய திலகம்..?
அப்படி என்ன அது சூரிய திலகம் என்பதை விரிவாக தற்போது காணலாம். ஸ்ரீராம நவமி அன்று நண்பகலில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளியை நேரடியாக கொண்டு வருவதே சூரிய திலகம் என்றழைக்கப்படுகிறது.
கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் மூலம் சூரிய ஒளியானது ராமர் சிலையின் நெற்றியில் படும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரகு வம்சத்தை சேர்ந்தவர் ராமர். ரகு என்றால் சூரியன் என்று பொருள் படும். சூரியனின் வம்சத்தை தான் ராமர் பிறந்தார் என்றும் இதிகாசத்தில் இருக்கின்றது.