அந்த நாள்ல மட்டும் சூர்யா வேற எங்கேயும் போக மாட்டார்.... - ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா

Suriya Jyothika
1 மாதம் முன்
145 Shares

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

மனம் திறந்து ஜோதிகா பேட்டி

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஜோதிகா பேட்டி ஒன்று கொடுத்தார். அந்தப் பேட்டியில் சூர்யாவை பற்றி சில ரகசியத் தகவலை பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பேட்டியில், எப்போதும் சூட்டிங் இருந்தாலும் குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழாவிற்கு தவறாமல் சூர்யா வந்து கலந்து கொள்வார். சூட்டிங் இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு நேரே வந்து விடுவார்.

குழந்தைகள் சம்பந்தபட்ட நாட்கள்ல காலண்டரில் குறித்து வைத்துக் கொள்வார். அதை எப்பொழுது மிஸ் பண்ணவே மாட்டார். அந்த நாள்களில் கண்டிப்பாக குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார். சூட்டிங் இல்லாத சமயத்தில் சூர்யாதான் பள்ளியில் குழந்தைகளை கொண்டு போய் விடுவார்.

இல்லாத பட்சத்தில் மாமா சிவகுமார் போவார். இது வரைக்கும் ஒரு நல்ல அப்பாவாக சூர்யா இருந்து வருகிறார். இதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது என்று ஜோதிகா கூறினார்.  

அந்த நாள்ல மட்டும் சூர்யா வேற எங்கேயும் போக மாட்டார்.... - ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா | Surya Jyothikaஇயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.