10ம் வகுப்பு தேர்வில் கணிதத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த சூர்யா - ஜோதிகா மகள் - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.
திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
கணிதத்தில் 100 மதிப்பெண்
மகள் தியா தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், சூர்யாவின் மகள் தியா தமிழில் 95 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும், கணிதத்தில் 100 மதிப்பெண்ணும், அறிவியலில் 98 மதிப்பெண்ணும், சமூக அறிவியலில் 95 மதிப்பெண்ணும் பெற்று பர்ஸ்ட் கிளாஸில் வெற்றி பெற்றுள்ளார். மகளின் மதிப்பெண்ணைப் பார்த்து சூர்யா, ஜோதிகாவும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மகிழ்ச்சியில் சூர்யா - ஜோதிகா
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா பல்லாயிரக்கணக்கான ஏழை, மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவி செய்து வருகிறார். அவரின் மகள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதை அவரது ரசிகர்களும், சினிமாத்துறையினரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், ‘அகரம்’ அறக்கட்டளையினால் படித்த ஏராளமான மாணவர்களும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது நடிகர் சூர்யா பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil
நள்ளிரவில் வெடித்துச் சிதறியது குளிர்சாதனப்பெட்டி : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீயில் கருகி பலி IBC Tamil