தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்; மத்தியில் ஆட்சியமைத்து யார்? கருத்து கணிப்பு!

Tamil nadu India Election Lok Sabha Election 2024
By Jiyath Mar 31, 2024 01:01 PM GMT
Report

மக்களவை தேர்தல் 2024 தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது 

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்; மத்தியில் ஆட்சியமைத்து யார்? கருத்து கணிப்பு! | Survey Say About Lok Sabha Elections 2024

அந்தவகையில் பிரபல செய்தி நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36, அதிமுக 2, பாஜக 1, மற்றவை 0 என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கட்சி இணைப்பு; எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார்? ராதிகா சரத்குமார் பதில்!

பாஜகவுடன் கட்சி இணைப்பு; எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார்? ராதிகா சரத்குமார் பதில்!

பாஜக ஆட்சியமைக்கும்

அதேபோல மக்களவையின் ஒட்டுமொத்த கணிப்பு படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 366 இடங்களிலும், இந்தியா கூட்டணி 104 இடங்களிலும், மற்றவை 73 இடங்களிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்; மத்தியில் ஆட்சியமைத்து யார்? கருத்து கணிப்பு! | Survey Say About Lok Sabha Elections 2024

இதன் மூலம் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.