ஐடி மாப்பிள்ளைதான் வேணும்; அடம்பிடிக்கும் தமிழக பெண்கள் - ஆய்வில் சுவாரஸ்யம்

Tamil nadu Marriage
By Sumathi Jun 20, 2023 11:26 AM GMT
Report

தமிழக பெண்கள் தேடும் மணமகன்களின் துறை குறித்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மணமகன்

Tamilshaadi.com வரன் தேடுவது குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஐடி மற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் அதிகமாக விரும்பப்படும் மணமகன்களாக இருக்கின்றனர். ஆனால், அதே துறையில் பணிபுரியும் பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய முன்வருவதில்லை.

ஐடி மாப்பிள்ளைதான் வேணும்; அடம்பிடிக்கும் தமிழக பெண்கள் - ஆய்வில் சுவாரஸ்யம் | Survey About Tamil Nadu Women Prefer Grooms

 ஆர்க்கிடெக்சர், தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள், சட்டத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் விளம்பரத்துறையில் பணியாற்றுபவர்கள் ஆகியவர்கள் அதிகமாக விரும்பப்படும் பெண்களாக இருக்கின்றனர்.

எதிர்பார்ப்பு

அதே போல, தன்னை விட மிக அதிகமாகவோ அல்லது மிக மிகக்குறைவாகவோ சம்பாதிக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. பெண்கள் ஒரே ஒரு பேச்சுலர் டிகிரி வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு அதிகமாக டிமாண்ட் இருக்கிறது. மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் ஆண்களுக்கு,

ஐடி மாப்பிள்ளைதான் வேணும்; அடம்பிடிக்கும் தமிழக பெண்கள் - ஆய்வில் சுவாரஸ்யம் | Survey About Tamil Nadu Women Prefer Grooms

ஒரே ஒரு டிகிரி வைத்திருக்கும் ஆண்களை விட இரண்டரை மடங்கு அதிகமாக டிமாண்ட் உள்ளது. திருமணத்துக்கு ஏற்ற வயதாக 26 முதல் 29 வயதாக பார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு 30 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள் திருமணத்துக்கு மிகவும் ஏற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதில், 60 வயதுக்கும் மேல் இருக்கும் 300க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களுக்கான வாழ்க்கைதுணையை தேடுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.