ஜோதிகாவுடன் அந்த ஒரு விஷயம் கனவாவே இருக்கு - ஓப்பனாக சொன்ன சூர்யா!
ஜோதிகாவை பற்றி சூர்யா பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா- ஜோதிகா
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடி சூர்யா- ஜோதிகா. ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘காக்க காக்க’ உள்ளிட்டப் பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

அதில் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களின் படிப்பிற்காக சூர்யா, ஜோதிகா இருவரும் மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர்.
மீண்டும் திரையில்..
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இதற்கான புரோமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

“ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது கனவாகவே இருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். என்னையும் ஜோதிகாவையும் வைத்து படம் இயக்குங்கள் என எந்த இயக்குநரையும் நான் கேட்கவில்லை.
அது தானாக நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அப்படி ஒரு பொருத்தமான கதையை இந்த பிரஞ்சமே நடத்தி வைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil