ரஜினியுடன் எனக்கு திருமணம் நடந்தது? பிரபல நடிகை பகீர் தகவல்!
ரஜினி குறித்து நடிகை கவிதா பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை கவிதா
நடிகை கவிதா ரஜினி, விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். நடிகர் விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும்
அஜித் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான அமராவதி போன்ற திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். சில வருடங்களாக சினிமாவிலும் சீரியலிலும் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், கவிதா முன்னதாக அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
ரஜினியுடன் திருமணம்
" ஒருமுறை மோகன்பாபுவுடன் நான் நடித்துக்கொண்டிருந்தேன், அப்போது எனது மேக்கப் மேன் பத்திரிகை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார். அந்த பத்திரிகையில் நானும், ரஜினியும் திருமணம் செய்துகொண்டதாக எழுதியிருந்தார்கள். எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
ஆனால், என்னுடன் நடித்து கொண்டிருந்த மோகன் பாபு மேக்கப் மேனை அழைத்து அந்த பத்திரிகையில் இருப்பதை வாசிக்க சொன்னார். வாசித்த பின், அதை கேட்டு உச்சக்கட்ட கடுப்பில் படப்பிடிப்பை பேக்கப் செய்து இயக்குனரை அழைத்து கொண்டு என்னையும் ரஜினியையும் பற்றி தவறாக எழுதியிருந்த பத்திரிகையின் அலுவலகத்துக்கு சென்று கத்திவிட்டார்.
நான் ரஜினியுடன் பல படங்களில் நடித்துள்ளேன். அதனால் தான் இவ்வாறு செய்து விட்டார்கள் என சிலர் கூறினர்" எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.