சில்லுனு ஒரு காதல் பார்ட் 2; ஹீரோ யார் தெரியுமா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சில்லுனு ஒரு காதல்
கிருஷ்ணாவின் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் இது.

ஜோதிகா, பூமிகா, வடிவேலு என பலர் நடித்திருப்பார்கள். இப்படம் ரிலீசான சமயத்தில் பெரிதான வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதன்பிறகு கொண்டாடப்பட்டு தற்போது வரை பலரது ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது.
நடிகர் கவின்?
சூர்யா மற்றும் ஜோதிகா திருமணத்திற்கு முன்பு கடைசியாக ஜோடியாக நடித்த படமும் இதுதான். இதில் இடம்பெற்றுள்ள முன்பே வா அன்பே வா.. பாடலுக்கு வைப் செய்யாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு ஃபேமஸ். இப்படத்தை இயக்கிய கிருஷ்ணா அதன் பிறகு நெடுஞ்சாலை மற்றும் பத்து தல ஆகிய படங்களை இயக்கினார்.

இந்நிலையில், சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்தப் பாகத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
லிப்ட், டாடா என வெற்றிப்படங்களாக கொடுத்து வந்த கவினின் நடிப்பில் சமீபத்தில் ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    