சம்மதிக்கல.. சூர்யா - ஜோதிகா மும்பைக்கு செல்ல காரணமே இதுதான் - உண்மை உடைத்த ஜெயந்தி கண்ணப்பன்!
சூர்யா - ஜோதிகா மும்பை சென்றது குறித்து ஜெயந்தி கண்ணப்பன் பேசியுள்ளார்.
சூர்யா - ஜோதிகா
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறியிருக்கிறார். இதனால் ஜோதிகாவுக்கு, மாமனார் மாமியாருடன் தகராறு. சூர்யாவுடன் விவாகரத்து என்றெல்லாம் செய்திகள் பரவியது.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இவர்களுக்கு நெருக்கமான ஜெயந்தி கண்ணப்பன், ”சிவகுமார் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இன்றும் அண்ணா மிகவும் கௌரவமான பதவியில் இருக்கிறார். இன்று டீநகரில் அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு போராடினார் என்பது அவரது குழந்தைகளுக்குத் தெரியும்.
மும்பை குடியேற்றம்
நல்ல மகன் என்பதால் அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்படுகிறது. தான் காதலித்த பெண்ணை சூர்யா திருமணம் செய்ய இருந்த போதும், சம்மதித்தால் தான் தாலி கட்டிக்கொள்ளுவேன் என உறுதியாக இருந்தார். தாம் தனியாக தீர்மானம் எடுக்கவில்லை. சிவக்குமார் மற்றும் அவரது மனைவியின் குடும்ப வாழ்க்கையைப் பார்த்து, மருமகள்களும் குடும்ப உறுப்பினர்களாக மாறினர்.

ஜோதிகாவும், சூர்யாவும் சிவகுமாரின் பெரிய குடும்பத்திலிருந்து விலகி மும்பையில் வசிக்கிறார்கள். இதற்குக் காரணம் குடும்பச் சண்டை அல்ல. அவர்கள் வேலைக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் இடம் பெயர்ந்தனர். அது அவ்வப்போது வரும்.
 அதனால் குடும்பத்தை உடைக்க அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டார்கள். மகனும், மருமகளும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    