அந்த ஒரு சம்பவம்தான்; அதனால்தான் விலகினேன் - பல வருட சீக்ரெட்டை உடைத்த ஜோதிகா!

Jyothika Bollywood Kollywood
By Sumathi May 10, 2024 05:30 PM GMT
Report

பாலிவுட் விலகல் குறித்து நடிகை ஜோதிகா மனம் திறந்துள்ளார்.

ஜோதிகா

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அந்த ஒரு சம்பவம்தான்; அதனால்தான் விலகினேன் - பல வருட சீக்ரெட்டை உடைத்த ஜோதிகா! | Jyothika About Kollywood And Bollywood Industry

இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

பாலிவுட் ரீ என்ட்ரி

இதுகுறித்து பேசியுள்ள அவர், "இத்தனை வருடங்களில் ஹிந்தி படங்களிலிருந்து எனக்கு வாய்ப்பு வரவில்லை. 27 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய படங்களில் நடித்தேன். அதன் பிறகு தென்னிந்தியாவில் மட்டுமே வொர்க் செய்தேன். என்னுடைய முதல் படமே ஹிந்தி படம்தான்.

jyotika

அது திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. தென்னிந்திய சினிமாக்களில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன். எனது திறமைக்கு நல்ல அங்கீகாரமும் கிடைத்தது.

ஹிந்தி படத்தை நான் தவிர்த்தது இல்லை. இத்தனை வருடங்களாக எனக்கு ஏற்ற கதைகள் எதுவும் அமையவில்லை என்பதுதான் உண்மை எனத் தெரிவித்துள்ளேன்.