8-வது தான் படிக்கிறார் அதுக்குள்ளவா? சினிமாவில் அறிமுகமாகும் மகன் - ஜோதிகா கொடுத்த அப்டேட்
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா - ஜோதிகா.
சூர்யா ஜோதிகா
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திர தம்பதிகள் சூர்யா - ஜோதிகா. கடந்த 11 செப்டம்பர் 2006-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது தியா, தேவ் என 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவேளைக்கு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா 36 வயதினிலே, ராட்சசி, மலையாளத்தில் மம்முட்டியுடன் " காதல் தி கோர்", ஹிந்தியில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள "சைத்தான்" என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகின்றார்.
சூர்யா சிறுத்தை சிவாவின் "கங்குவா" படத்தில் தீவிரம் காட்டி வருகின்றார். இப்படத்திற்கு பிறகு அவர் கார்த்திக் சுப்புராஜ்ஜுடனும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார்.
சினிமாவில் அறிமுகம்
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜோதிகா சினிமாவில் மகன் தேவ் நடிப்பதை குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில் ஜோதிகாவிடம் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜோதிகா, நிச்சயம் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் என்றார்.
மேலும் தன்னுடைய மகன், மகள் இருவருமே படிப்பின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற ஜோதிகா, ஒருவேளை படிப்பு முடித்து நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.