படிப்பில் கெட்டி தான் - சூர்யா ஜோதிகா மகள் தியா +2 தேர்வில் எடுத்த மார்க் தெரியுமா..?

Suriya Jyothika Tamil Actress
By Karthick May 06, 2024 06:32 AM GMT
Report

நடிகர் சூர்யாவின் மகள் +2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சூர்யா ஜோதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா - ஜோதிகா தான். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். தியா என்ற பெண்ணும், தேவ் என்ற பையனும் உள்ளார்கள்.

suriya with jyothika and children

இன்று தமிழகம் முழுவதும் +2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் மகள் தியா பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளதாக செய்தி வந்துள்ளது

+2 வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் - சென்னை நிலவரம் தெரியுமா?

+2 வகுப்பு பொதுத்தேர்வு - மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் - சென்னை நிலவரம் தெரியுமா?

தியா மார்க்  

தியா மொத்தமாக 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அவர் தமிழில் 96 மதிப்பெண், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண், கணக்கில் 94 மதிப்பெண், பிசிக்ஸில் 99 மதிப்பெண், கெமிஸ்ட்ரியில் 98 மதிப்பெண், கம்ப்யூட்டர் சயின்ஸில் 97 மதிப்பெண் என எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

suriya jyothika daughter diya and son dev

ஆனால், சூர்யா மகள் தியாவிற்கு தற்போது 16 வயதாகும் நிலையில் எப்படி 12 ஆம் வகுப்பு படிக்க முடியும் என்று இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியானது பொய்யான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.